Tuesday 4 September 2012

ரோபோவுக்கு தூக்குத்தண்டணை


ஒரு வழியாக ஒரு ரோபோ இயந்திரத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அஜ்மல் கசாப்பைத்தான் ரோபோ என்கிறேன்.12 அ 13 வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் வைத்து மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல் ப
ுரிய அனுப்பப்படும் சிறுவர்களை மனித எந்திரம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

படித்து பட்டம் படித்து அதன்பிறகும் சிந்திக்கும் திறனில்லாமல் மதவெறி பிடித்து அலைபவனை மிருகம் எனலாம்,ஆனால் இது போன்ற சிறுவர்கள் கதை வேறு.

முழுக்க முழுக்க மூளைச்சலவை.இறைவன் உனக்கு சொர்க்கத்தை கொடுப்பார்,இந்த உலகில் அனுமதிக்கப்படாத இன்னும் பல விஷயங்களை அளிப்பார் என்று ஆசைக்காட்டப்படும்போது அந்த கல்வியறிவு இல்லாத பிஞ்சு உள்ளங்கள் என்ன செய்யும்? இதுதான் உண்மை என்று நம்பும்.

கசாப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனை தீவிரவாதத்தை நிறுத்திடுமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இந்த தண்டனை மும்பையில் நடைபெற்ற கொடுஞ்செயலினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம்.ஆனால் இதனால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.

என்று மனிதன் மத அடிப்படைவாதத்திலிருந்து விடுபடுகிறானோ,மதப்பழமைவாதிகளை புறக்கணிக்கத் துவங்குகிறானோ,என்றைக்கு ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு உண்மைகளை கண்டறிய முற்படுகிறானோ அன்றுதான் இத்தகு படுபாதகமான மத(ட)க்கொடுமைகளில் இருந்து மனிதகுலத்துக்கு விடுதலை கிடைக்கும்.
 

No comments:

Post a Comment