Tuesday 4 September 2012

மரத்தில் பணம்

முதலீடு நோக்கில் வீட்டுமனை வாங்கி வைத்திருக்கிறீர்களா?பணியின் பொருட்டு பட்டணத்துக்கு வந்ததால் கிராமத்தில் இருக்கும் உங்கள் நிலம் தரிசாக கிடக்கிறதா? ஆம் எனில் அவற்றில் மரங்கள் நடலாமே.

ஆம்,உங்கள் காலி மனை,விவசாய நிலங்களில் வேங்கை,தேக்கு,பிள்
ளைமருது,சந்தனம்,செஞ்சந்தனம்,ரோஸ்வுட்,பூவரசு போன்றவற்றை நட்டு ஒரு சில வருடங்கள் பராமரித்தால் போதும்,பிறகு பராமரிப்பு தேவையில்லை.

இதனால் நல்ல பலன்கள் உண்டு.முதலில் சுற்றுச்சூழலுக்கு உறுதுணையாக பத்து,பதினைந்து வருடங்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்களை வளர்த்த பெருமை நமக்கு.

இரண்டு நாம் வீடு கட்ட நினைக்கும் போது, நம் மனையில் இருக்கும் மரங்களையே நம் வீட்டு தச்சுவேலைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்,மீதமிருக்கும் மரங்களை விற்று பணமாக்கி கொள்ளலாம்.

அடுத்து விளை நிலத்தில் நடப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் எனில் பதினைந்து வருடங்களில் உங்கள் நிலத்தின் மதிப்பும் உயர்ந்திருக்கும்,உங்கள் நிலத்தில் லட்சக்கணக்கான அல்லது கோடிகளின் ரூபாய் மதிப்பில் மரங்கள் இருக்கும், நிச்சயமாக எந்த வைப்பு நிதியிலும்,இன்சூரன்சிலும் கிடைக்காத தொகையாக இருக்கும்.

தீவிரமாக யோசிப்போமா மரம் வளர்ப்பு குறித்து.

No comments:

Post a Comment