Tuesday 4 September 2012

பெரியாரின் மதம்,சாதி

சந்தர்ப்பவாதிகளாய்,தாங்கள் வடிவமைத்துக்கொண்ட அரசியல் கொள்கைகளுக்காக வாய்கூசாமல் பெரியாரை இகழ்வோரே!

தமிழில் உருவான நூல்களிலேயே தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தது திருக்குறள்,அந்த குறளின் பெருமையை பரப்ப 1948-ல் திருக்குறள் மாநாடு ஒன்றை நடத
்தினார் என்பதை எத்தனை பேர் அறிவோம்?

அய்யா! திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருக்கிறதெ,அதில் தங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?என்று கேட்டதற்கு, திருவள்ளுவர் என்பவர் ஒரு பலசரக்கு கடைக்காரர் போன்றவர்,அவரிடம் யாருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் தமிழா நீ என்ன மதம் என்று எவரேனும் கேட்டால் வள்ளுவன் மதம் என்று சொல்லு.என்ன சாதி என்றால் குறள்சாதி என சொல்லு என்று அறிவுறுத்தியவர் பெரியார்.

இப்படி வாழ்நாள் முழுவதையும் தமிழையும்,தமிழரையும் நேசித்து,தமிழருக்காக உழைத்தவரை சந்தர்ப்பவாதிகளாய் இகழ்கிறார்களே,அவர்களது மனசாட்சி உறுத்தவில்லையா?

மகனின் பொறுப்பற்ற குணத்தின் மீது கொண்ட கோபத்தினால் நீ எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்குடா என்று ஒரு தந்தை பொய்க்கோபத்தால் சொன்னால்,அந்த தந்தையை வெட்ட அரிவாளை தூக்கும் புத்திபேதலித்த பிள்ளை போன்றவர்கள் இவர்கள்.

No comments:

Post a Comment