வாடிய பயிரை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியதே என்று கூறிய வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் மனிதகுலம் நோய் நொடியின்றி வாழ உணவுமுறைகளையும், நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய மூலிகைகளையும் கூறியுள்ளார்.
அவர் சிறப்பித்து கூறியுள்ள மூலிகைகள் கரிசாலை,தூ

துவேளை,முசுமுசுக்கை மற்றும் புளியாரை.இவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என வள்ளலார் கூறியுள்ளார்.
அவர் சிறப்பித்து கூறியுள்ளவற்றில் புளியாரையின் குணங்களை பார்ப்போம்.
தமிழகம் முழுதும் நீர் நிலைகள்,ஈரப்பதமான இடங்கள்,மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.மென்மையான நீண்ட காம்பில் முக்கூட்டு இலைகள் இருக்கும் சிறு செடி இது.
உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு.இதன் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட கழிசல் குணமாகும்.
பருப்புடன் சேர்த்து குழம்பாகவோ,கூட்டு அல்லது பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம்,பித்தம், நாவில் சுவையின்மை,மயக்கம் போன்றவை குணமாகும்.
புளியாரையுடன் வேறு சில மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் புளியாரை நெய் மூலம்,இருமல்,காசம்,காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலையை அரைத்து ஒரு சிறு உருண்டை எடுத்து தினந்தோறும் மோரில் கலந்து குடித்து வர வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை தீரும்.இதன் இலையை அரைத்து முகத்தில் பூசிவர பருக்கள் நீங்கும்,முகம் பொலிவு பெறும்.
புளியாரையின் இத்தகு குணங்களால்தான் வள்ளலார் இதனை சிறப்பித்து கூறியிருக்கிறார்.இனி புளியாரையை அடிக்கடி பயன்படுத்துவோமா?
அடுத்த பதிவில் வள்ளலார் கூறிய காலை உணவு கரிசாலைப்பால்.