Wednesday 19 August 2015

பேரிக்காய் ஒரு காலத்தில் கடைத்தெருக்களில் சர்வசாதாரணமாக காணப்படும் பழம்,இப்போது அரிதாகி விட்டது.பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்படும் தருணத்தில் மட்டும் விற்கப்படும் பழமாகி விட்டது.
ஆப்பிள் குடும்பத்தை சார்ந்த பழம்தான் பேரிக்காய் என்றாலும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இதில் நிறைந்து காணப்படுகிறது.மேலும் விட்டமின் பி, பி2, மற்றும் சுண்ணாம்பு,இரும்புச்சத்தும் இதில் ஏராளமாக உண்டு.
எலும்புகள்,பற்கள் ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கக்கூடியது,வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது,இரவில் உணவுக்குப்பின் தினந்தோறும் ஒரு பழத்தை குழந்தைகளை உண்ணச் செய்யலாம்.
கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் ஏற்ற பழம் இது,கருவில் இருக்கும் குழந்தைக்கும் நலம் தரும்.அதுமட்டுமல்ல பால் கொடுக்கும் பெண்களுக்கும் தாய்ப்பாலைச் சுரக்கச்செய்யும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
வாய்,வயிறு ஆகியவற்றில் ஏற்படும் புண்களை பேரிக்காய் ஆற்றும்.நரம்புத் தளர்ச்சியை போக்கும்,கண்களுக்கு ஒளி கொடுக்கும்,உடலுக்கு தெம்பு தரும்.வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும்,வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும்.
இதய பலவீனம்,இதயம் படபடப்பு உள்ளவர்கள் பேரிக்காயை தொடர்ந்து உண்டு வர படபடப்பு நீங்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு தெம்பு உருவாவதை உணரலாம்.
பேரிக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் பழமல்ல,குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழமாகும்,இப்போது பேரிக்காய் சீசன்,கடைகளில் பேரிக்காய் தென்படுகிறது.பேரிக்காய் சீசன் முடியும் வரை தினந்தோறும் விடாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் பேரிக்காய் சாப்பிட்டு வருவோம்,நிச்சயம் நாம் பல மாற்றங்களை உணரலாம்,ஜீரண சக்தி அதிகரித்து பசியுணர்வு,உடல் தெம்பு,சுறுசுறுப்பு,நோயெதிர்ப்புத்திறன் அதிகரிப்பு ஆகியவற்றை அனுபவப்பூர்வமாக உண்ரலாம்.
ஆப்பிள் விலை கிலோ ரூபாய் 150க்கு குறையாமல் விற்கும் நிலையில் ஆப்பிளை விட பல மடங்கு நலன் தரும் அதே ஆப்பிள் குடும்பத்தை சார்ந்த பேரிக்காய் கிலோ முப்பது அல்லது நாற்பது ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் அந்த பேரிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பது பொருத்தமான ஒன்றுதானே? இது பேரிக்காய் சீசன்,நாட்டு பேரிக்காய் கிடைத்தால் விடாதீர்கள்.

No comments:

Post a Comment